Skip to main content

Gardens

How to Market Successfully

  Motivational Theory and Marketing Strategies Marketers have to understand the motives of their potential customers to enjoy good sales. A buyer has several motives and each change with various elements. In such cases the marketers can readily help their customers by changing their marketing strategy so that the conflict is resolved. Following are the major conflicts that may arise − Approach Conflict  − This conflict arises when a consumer has two different choices of similar products or services. He gives equal importance to them, but is unable to choose one over the other. Approach Avoidance Conflict  − This type of conflict happens when the consumer decides in favor of a product, but is unhappy with a particular feature of the product and wants to avoid it. Under such circumstances, the marketer may come up with few modifications in the existing product and make it suitable for the consumer.

GOLDEN AGE COMING SOON

எதிர்காலம் எப்படி இருக்கும்?
தவறாமல் படியுங்கள்....



2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப எல் இ டி பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

'Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Section ஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கு தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்,

டாக்டர்கள் வேலையை Ada app, 

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்,

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம்

என சேவை இலவசமாக தருகின்றன.

ஊபர், ஓலா வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS ஆப் மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.
2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலை ஜாலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .


மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். எதிர்காலம்  நம் கையில் இல்லை.  கடந்த காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா?

அதுவும் சரிதான்...

Comments

Popular posts from this blog

How to Market Successfully

  Motivational Theory and Marketing Strategies Marketers have to understand the motives of their potential customers to enjoy good sales. A buyer has several motives and each change with various elements. In such cases the marketers can readily help their customers by changing their marketing strategy so that the conflict is resolved. Following are the major conflicts that may arise − Approach Conflict  − This conflict arises when a consumer has two different choices of similar products or services. He gives equal importance to them, but is unable to choose one over the other. Approach Avoidance Conflict  − This type of conflict happens when the consumer decides in favor of a product, but is unhappy with a particular feature of the product and wants to avoid it. Under such circumstances, the marketer may come up with few modifications in the existing product and make it suitable for the consumer.

நீ உன்னை அறிந்தால்

நீ உன்னை அறிந்தால். " தன்னை அறிதல்” ”   என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும்  “தன்னை அறிதல் ” ”   என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி ; “யோகா , தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும் ” ”என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர். “நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித  கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி ”  என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா ? “ஆம் ” ”என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில

மனதில் நல்லதே நினை

வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவன் நடைப்பயணமாக ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் நீண்ட தூரம் நடந்ததால், அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் படுத்து ஒய்வெடுக்க எண்ணி, அந்த மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான்.  சிறிது நேரத்தில் அவனுக்கு மிகவும் பசியெடுக்க ஆரம்பித்தது. மிகவும் பசியாக இருக்கிறதே ஏதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சயமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான். உணவு சாப்பிட்டதும், அவனுக்கு உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். நினைத்தவுடனே தலையணையும் வந்தது. அதை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டான். நடந்து வந்ததால் கால்கள் மிகவும் வலியாக உள்ளதே, கால்களை இரண்டு பேர் அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே! என்று எண்ணினான். உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து, அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள். அவன் மிகவும் சந்தோ~ப்பட்டான். ஆனாலும் இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல், மேலும் கீழுமாய்ப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் ப