Skip to main content

Gardens

How to Market Successfully

  Motivational Theory and Marketing Strategies Marketers have to understand the motives of their potential customers to enjoy good sales. A buyer has several motives and each change with various elements. In such cases the marketers can readily help their customers by changing their marketing strategy so that the conflict is resolved. Following are the major conflicts that may arise − Approach Conflict  − This conflict arises when a consumer has two different choices of similar products or services. He gives equal importance to them, but is unable to choose one over the other. Approach Avoidance Conflict  − This type of conflict happens when the consumer decides in favor of a product, but is unhappy with a particular feature of the product and wants to avoid it. Under such circumstances, the marketer may come up with few modifications in the existing product and make it suitable for the consumer.

நீ உன்னை அறிந்தால்





self-development.jpg

நீ உன்னை அறிந்தால்.
"தன்னை அறிதல்””  என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும்  “தன்னை அறிதல் என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்”என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.
“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித  கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா?“ஆம்”என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.”இல்லை”என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரிசரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்”என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா?
“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது?”இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது”
 “ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா?என எதிர் கேள்விபோட்டார். “”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.”என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என்ற திருக்குறளை நம் நாட்டின்  குடியரசுத் தலைவராக இருந்த  ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்”என்னும் வள்ளுவர் வாக்குப்படிவலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.
நண்பர்  கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்துகரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல்சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார்  “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.
 “யோகாவும் தியானங்களும் தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல.  “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம்இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதாஇல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.
அதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.இன்றைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா,தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று  கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.
நீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழகவாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
 தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
வணிக நூலகம்: உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்
தன்னை தானே அறிந்துக் கொள்வது என்பது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான விஷயம். நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு பல்வேறு வகையான புறக்காரணிகளும், நம்முள்ளே இருக்கும் பல்வேறு வகையான காரணிகளும் காரணமாக அமைக்கின்றன. என்னை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்று குறைச் சொல்வதை விட அதை எதிர்க்கொள்வது மேலானதாகும்.
அதேபோல நாம் மற்றவரை சரியாக புரிந்துக் கொள்ளுவதில்லை என்ற குறைபாடும் புரிதலுக்கு எதிராகிறது. நாம் ஏன் மற்றவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பலவாறான பதில்கள் இருக்கலாம்.
ஆனால், அவற்றுள் மற்றவர்களின் மனப்பாங்கு, எண்ணம், குணாதிசயங் களை அறிந்துக் கொள்ளுதல் ஆகியவை மிகவும் பயனுள்ளது. அவ்வாறு அறிந்துக் கொள்ளும் பொழுது அடுத்தவர் பற்றிய நம் புரிதல் மிகச் சரியானதாக இருக்கும். தவறான கண்ணோட்டம், குறைபாடுள்ள அணுகுமுறைகள், சிறிய தவறுகளை பெரிதுபடுத்துதல், அதிக எண்ணிக்கையில் குறைபாடுகளை மட்டுமே பூதாகரமாக்குதல் ஆகியவை அடுத்தவர்களை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு தடைக் கல்லாக உள்ளது. இந்த தடைகளை தாண்டி வருவதற்கு முதலில் நம்மே நாமே சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
புரிதல் அவசியம்
அந்த புரிதல் இருந்தால் மற்றவர்கள் பற்றிய புரிதல் எளிதாகும். மற்றவர்களைப் போல மனமும் அவர்களை போன்ற அளவான நேரம், குறைவான சக்தி ஆகியவைகளைதான் நாமும் பெற்றிருப்பதாக நினைக்கிறோம். அந்த நினைவில் அவர்களை போலவே குறுக்கு வழியில் வெற்றிக்கான வேகநடை பயில்கிறோம். விளைவு, நாம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் நம்முடைய நேரம், சக்தி மற்றும் மன வலிமை ஆகியவை நம்மை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்ட முடியாமல் போகிறது. அது போன்ற நேரங்களில் இருட்டில் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழுகின்றோம். உலகமே நமக்கு எதிராக இருப்பதாகவும், உலகில் உள்ள அனைவரும் நம்மை எதிர்ப்பதாகவும் மனதில் ஆழமான கருத்துகளை ஏற்படுத்திக் கொள்கின்றோம். மாறாக, நாம் செய்வதை திருந்தச் செய்யும் பொழுது நம்மை பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுகிறது. இந்த உணர்வு நம்மை புரிந்து கொள்வதற்கு எதிரான போரில் பாதி வெற்றியை கொடுத்து விடுகின்றது.
குறைகளைத் தெரிந்து கொள்ளும் பொழுது முன்பே எடுத்த முடிவுகளையும், கண்ணோட்டங்களையும் அடிப்படை யாக வைத்து முடிவுகளை மேற்கொள் கின்றோம். மாறாக, அதுபோன்ற செயல்களை தவிர்த்து அடியோடு அழித்து புதிய எண்ணங்களை பயிர் செய்தல் அவசியம்.
நம்மை பற்றிய மற்றவர்களின் புரிதல்
நாம் குழப்பமான படைப்பு, பல உருவங்களாக இருக்கின்றோம். ஒவ் வொருவரிடமும் ஒவ்வொரு வகையாக நடந்து கொள்கின்றோம். நண்பர்களிடத் தில் நடந்து கொள்வதை போல பணியிடத் தில் நடந்து கொள்வதில்லை. பணியிடங் களில் நடந்து கொள்வதை போல குடும்பத்தில் நடந்து கொள்வதில்லை. இந்த பல்வேறு பல ஒருவன்கள் நம்மை மற்றவர்கள் புரிந்துகொள்வதில் குழப் பங்களை ஏற்படுத்துகின்றது. மற்றவர் களிடம் பேசிக்கொண்டிருக்கின்றோமா அல்லது நம்மை நாமே பார்த்துக் கொண்டிருக்கின்றோமா என்பதில் தெளிவு இருப்பதில்லை. உண்மையில், மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வதில்லை, தவறான மதிப்பீடு செய்கிறார்கள் என்றெல்லாம் எதை வைத்துக் கூறுகின்றோம். உண்மையாக இருப்பது எளிதான காரியம் அல்ல.
தன்னை பற்றிய புரிதல்
மற்றவர்களை பார்க்கும் பொழுது அனைவரையும் பற்றிய ஒருமித்த கருத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல நண்பர்கள், குடும்பத்தினர், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒருவரை புரிந்துகொள்ளவில்லை என்றால் தவறு மற்றவர்களிடம் அல்ல தனிமனிதனிடமே. அவ்வாறு அனைவரும் தவறாக கூறும் பொழுது அந்த கருத்துகளை சரி பார்த்து நம்மிடம் இருக்கக்கூடிய குறைபாடுகளைக் களைய வேண்டும். தன்னை தானே அறிந்துக் கொள்வதும், மற்றவர்களை அறிந்து கொள்ளுவதும் மனிதர்களுக்கு மிகுந்த கடினமான செயல். ஏனென்றால், மற்றவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் சிக்கலானதாக இருக்கும். பல அர்த்தங்களையும், விளக்கங்களையும் அளிப்பதாக இருக்கும். அவற்றை சீர் தூக்கி பார்த்து புரிந்து கொள்வது மிகவும் கடினமான செயல். இதை உணர்ந்து கொள்ளாமல், காணும் காட்சிகளிலும் பேசும் பேச்சுகளிலும் எந்த விதமான முயற்சிகளும் இல்லாமல் தொடர்பே இல்லாமல் பங்கு கொள்கின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வதற்காக அவர்களை பழித்து பேசக் கூடாது. மாறாக நம்மை சரியாகப் புரிந்து கொள்ள வசதியாக சுலபமான முறையில் நம்மை வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு மற்றவர்கள் நம்மை எளிதாக புரிந்துக் கொள்ள கீழ்கண்ட செயல்கள் உதவும்.
 நிதானமான செயல்பாடு
 நேர்மைக்கு தலை வணங்குதல்
 நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்
நிதானமான செயல்பாடு
பார்த்தவுடன் தீர்ப்பு எழுதாதீர்கள். முதல் பார்வையில் சரியான நபரை மிகவும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். போகப் போக அந்த நடத்தைக்கு விளக்கங்களும், சப்பைக் கட்டுக்களும் நிதானமாக வந்து சேரும். எந்த சூழ்நிலையில் ஒருவர் அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கங்களை புரிந்து கொண்டால் மனிதர்களைப் புரிந்து கொள்வது எளிதாகும். உதாரணமாக, ஒருவர் மிகவும் படபடப்போடும், பயத்தோடும் கேள்விகளுக்கு பதில் கூறும்பொழுது முரட்டுத்தனமானவன் என்றோ, முட்டாள் என்றோ முடிவுக் கட்டக் கூடாது. மாறாக வேறொரு சூழ்நிலையில் அந்த தவிப்பும், தாக்கமும் இல்லாமல் சாதாரணமாக நடந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் முதலில் நாம் தவறாகப் புரிந்துகொண்டதை தொடர்ச்சியாக வேறு சூழ்நிலைகளுக்கு பொருத்திப் பார்க்க கூடாது.
நேர்மைக்கு தலை வணங்குதல்
நேர்மையான முறையில் மற்றவர் களை புரிந்துகொள்வது அவசியம். நேர்மையான முறையில் மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுது, நாம் எந்த வகையில் அவரிடம் தொடர்பு வைத்திருக்கிறோமோ அதைப் பற்றிய சிந்தனை மேலோட்டமாக வரும். ஆழ்மனதில் இருக்கக்கூடிய அவரைப்பற்றிய குறைகள், தற்போதைய நிகழ்வை பின்னுக்குத் தள்ளி அவரை தவறான நபராக பார்ப்பதற்கு தூண்டும். இதை தவிர்த்தலே நியாயமாகவும், நேர்மையானதாகவும் நடந்துகொள்ளு தல் ஆகும். நியாயமாகவும், நேர்மையாக வும் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று நினைக்கிற பொழுது மற்றவர் களைப் பற்றிய நம்முடைய கணிப்பில் தவறுகள் குறைவாக இருக்கும்.
நிகழ்வுகளை தொடர்பு படுத்தாமல் தனித்தனியாக பார்த்தல்
ஒருவரை பற்றி ஒரு கருத்தை முன்னரே முடிவு செய்துவிட்டு, அவரையோ அவரைப் போன்றவரையோ பார்க்கும் பொழுது நம்முடைய கருத்து சரியானது என்று எண்ணுவது தவறு. இது எல்லா சூழ்நிலைகளிலும், முடிவு எடுப்பதிலும், புரிந்து கொள்வதிலும் தவறுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ராஜேஸ் மற்றும் நிர்மலா இரண்டு பேரில் யாரை தலைமை மேலாளராக தேர்வு செய்வது என்ற சூழலில் நிர்மலாவிற்கு அந்த அளவிற்கு நிகழ்வுகளை கையாளும் திறனும் கருத்து பரிமாறும் திறமைகளும், தெளிந்த அறிவும் இல்லாததால் ராஜேஸ் தேர்வு செய்யப்படுகிறார். இதில் பிரச்சனை என்னவென்றால் நாம் நிகழ்வுகளை தொடர்புபடுத்தி நிர்மலா போன்ற பெண்ணால் கடினமான முடிவுகள் எடுக்கமுடியாது, கருத்துகளை ஓங்கி கூற முடியாது, குழப்பம் கூடுதலாக இருக்கும் என்று வேறு ஏதோ ஒரு நிகழ்வில் உள்ள காரணிகளை இங்கு தொடர்பு படுத்துவதால் முடிவுகள் தவறாக அமைக்கின்றன. புரிதலில் தவறுகள் கூடுகின்றன.
நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை படிக்கிறபோது, இதெல்லாம் தெரிந்த செய்திதானே என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இவற்றை ஆழ்மனதில் எழுதி வையுங்கள். அடுத்த முறை உங்களை பற்றியோ, மற்றவர்களை பற்றியோ புரிந்துக் கொள்ள வேண்டிய சூழலில் நிதானமான செயல்பாடு, நேர்மைக்கு தலை வணங்குதல், நிகழ்வுகளை தொடர்புபடுத்தாமல் தனித்தனியாக பார்த்தல் ஆகியவை உங்களுக்கு உதவும். என்னை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றவர்களை பற்றிய என்னுடைய புரிதல் தவறானதாக இருக்கின்றது என்ற கருத்தை இத்தோடு ஆழ்மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள்.

Comments

Popular posts from this blog

How to Market Successfully

  Motivational Theory and Marketing Strategies Marketers have to understand the motives of their potential customers to enjoy good sales. A buyer has several motives and each change with various elements. In such cases the marketers can readily help their customers by changing their marketing strategy so that the conflict is resolved. Following are the major conflicts that may arise − Approach Conflict  − This conflict arises when a consumer has two different choices of similar products or services. He gives equal importance to them, but is unable to choose one over the other. Approach Avoidance Conflict  − This type of conflict happens when the consumer decides in favor of a product, but is unhappy with a particular feature of the product and wants to avoid it. Under such circumstances, the marketer may come up with few modifications in the existing product and make it suitable for the consumer.

மனதில் நல்லதே நினை

வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவன் நடைப்பயணமாக ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் நீண்ட தூரம் நடந்ததால், அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் படுத்து ஒய்வெடுக்க எண்ணி, அந்த மரத்தின் அடியில் ஓய்வெடுத்தான்.  சிறிது நேரத்தில் அவனுக்கு மிகவும் பசியெடுக்க ஆரம்பித்தது. மிகவும் பசியாக இருக்கிறதே ஏதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சயமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான். உணவு சாப்பிட்டதும், அவனுக்கு உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். நினைத்தவுடனே தலையணையும் வந்தது. அதை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டான். நடந்து வந்ததால் கால்கள் மிகவும் வலியாக உள்ளதே, கால்களை இரண்டு பேர் அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே! என்று எண்ணினான். உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து, அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள். அவன் மிகவும் சந்தோ~ப்பட்டான். ஆனாலும் இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல், மேலும் கீழுமாய்ப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் ப